ஏற்காடு மலைப்பாதை வளைவுக்கு வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா?

ஏற்காடு செல்லும் மலைப்பாதை வளைவுக்கு ஈ.வெ.ரா., பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இடத்தில் தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டினர்.

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பிக்கும் பொழுது எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்துவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வளைவில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, ‘தகடூர் அதியமான்’ வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது: 8வது வளைவுக்கு, ‘தகடூர் அதியமான்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு ஈவெரா பெயரை வைத்துவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வளைவிற்கு, ‘தகடூர் அதியமான் பெயர் தான் இருக்க வேண்டும், என்றனர்.

ஈவெரா பெயரை அழித்த நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை துறையினர், நா.த.க.,வினர் மீது நடவடிக்கை கோரி

ஏற்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்