ஏறாவூர்ப்பற்று கால்நடை வளர்ப்பாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் அமைந்துள்ள மேசல்தரைப் பகுதிக்கு நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சென்றிருந்தார்.

அப்பகுதியிலிருந்த சுமார் 50 கல்நடை வளர்ப்பாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாக எடுத்துரைத்திருந்தார்கள்.

அப்பகுதியில் மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல், போன்றவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரைப் பகுதி குறைந்து கொண்டு செல்கின்றன.

தமது மேய்ச்சல்தரை நிலம் பாதுகாக்கப்படாவிட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய்விடும் எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர், அப்பகுதி பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு அவ்விடத்திலிருந்தவாறே தொலைபேசி மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.

இவ்வாறு அத்துமீறி மேச்சல்தரைப் பகுதியில் காடழிப்பில் ஈடுபடுபவர்களுக்கும், பயிற் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறியிருந்தனர்.

மேலும் அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் காடழிப்புகள், சட்டவிரோத பயிற்செய்கை, போன்றவற்றையும், நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பின் இயற்கை வளமான காடு அழிக்கப்பட்டால், காட்டு யானைகள் கிராமங்களை நோக்கியும், வருவதைக் தடுக்க முடியாமல் போய்விடும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த