எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் வெடித்து சிதறியது!

அமெரிக்காவின் பிரபல பணக்காரர் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட, வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த ‘ஸ்டார்ஷிப்’ விண்கலம், தனது சோதனைப் பயணத்தின் இறுதிப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

ஒரு மணித்தியாலம் நீடித்த இந்த விண்வெளிப் பயணத்தின் போது சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், இந்தச் சோதனைப் பயணம் பெருமளவில் வெற்றிகரமாக அமைந்ததாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்கலம் இந்தியப் பெருங்கடலில் மோதி தீப்பிழம்புகளாக மாறிய போதிலும், திட்டமிட்ட இலக்குகளில் பெரும்பாலானவை எட்டப்பட்டதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் நேரலை ஒளிபரப்பின் போது தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ , எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்த மேம்படுத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத்தையே முழுமையாக நம்பியிருக்கிறது. இதனால் இந்தச் சோதனை ஓட்டம் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு முனையிலிருந்து விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

சோதனைக்காக 20 போலி ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை இது சுமந்து சென்றதுடன், பயணத்தின் பாதியிலேயே அவை வெற்றிகரமாக விண்வெளியில் விடுவிக்கப்பட்டன.

உலகைச் பாதியளவு சுற்றிவந்து இந்தியப் பெருங்கடலை நோக்கிய இலக்கை நோக்கி விண்கலம் பயணித்தது.

விண்கலம் விண்வெளியில் பயணித்த போது, அதன் எஞ்சின்களில் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திட்டமிட்ட துல்லியமான சுற்றுப்பாதையை அடையவில்லை. “இதுவொரு வழக்கமான சுற்றுப்பாதை நுழைவு அல்ல” என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பேச்சாளர் டான் ஹுவாட் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோல், ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ எதிர்பார்த்தபடி விண்கலத்திலிருந்து பிரிந்த போதிலும், பூமியை நோக்கித் திரும்பும் போது அதன் எஞ்சின் எரியும் செயல்முறை தோல்வியடைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பூஸ்டர், மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.

இறுதிக்கட்டத்தில் விண்கலம் வெடித்தது எதிர்பாராத ஒன்று அல்ல என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சோதனையின் மூலம் விண்கலத்தை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் முன்கூட்டியே வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கல ஏவுதல் குறித்து தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எலோன் மஸ்க் இதுவொரு காவியத்தன்மை வாய்ந்த ஏவுதல் மற்றும் தரையிறக்கம் என்று வர்ணித்துள்ளதுடன், “எனது குழுவினர் மனிதகுலத்திற்கான ஒரு வரலாற்று இலக்கை அடித்து சாதித்துள்ளனர்” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்