எகிப்துடன், 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட மறுத்ததால், இஸ்ரேலுக்கான தன் பயணத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ரத்து செய்துள்ளார்.
வலியுறுத்தல் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே, 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தம் குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இப்பேச்சு இன்னமும் முழுமை அடையாத காரணத்தால், இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் எலி கோஹென் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து உள்ளார். இதையடுத்து, இஸ்ரேலுக்கான தன் பயணத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ரத்து செய்துள்ளார்.
இந்த ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானால், உள்நாட்டு எரிவாயு இருப்பு குறைந்து, அதன் விளைவாக இஸ்ரேலில் எரிவாயுவின் விலை உயர்ந்து விடும் என இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.