ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
மாகாண முதலமைச்சர்களாக இருந்தால் தமது பகுதி மக்களுக்கான சேவைகளை ஆற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
அரசாங்கம்மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதால் மாகாணசபைத் தேர்தலில் எதிரணியால் வெல்ல முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.
எம்.பிக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கட்சி தலைவர் இன்னும் இறுதி முடிவை, அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.