எதிர்க்கட்சித் தலைவர் சஜித் புதுடெல்லியில்…

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சஜித் பிரேமதாச புதுடெல்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (03) புதுடெல்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார்.

1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது, உற்பத்திகள், சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் ஊடாக 9,000 க்கும் மேற்பட்ட நேரடி அங்கத்தவர்களையும், கிட்டத்தட்ட 300,000 மறைமுக அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும். இந்தக் கலந்துரையாடலின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தொழிநுட்ப ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (ISFTA) கீழ் பல புதிய வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் என்றும், இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும், விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

Make in India முன்முயற்சி, டிஜிட்டல் இந்தியா, Industrial 4.0 மற்றும் பசுமை எரிசக்தியை நோக்கித் திரும்பும் முயற்சிகள் உட்பட இந்தியாவின் தொடர்ச்சியான தொழிற்துறை முன்னுரிமைகள் குறித்து CII பிரதிநிதிகளால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. இலங்கையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு மூலம் இரு தரப்பினருக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிராந்திய மதிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று இறுதியில், இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர்.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு யோசனை முன்வைத்தார். அவ்வாறே, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு CII வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

“உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எழுச்சியானது இலங்கைக்கு ஓர் சவாலாக அமையவில்லை. எனவே, நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

அதிகளவிலான அரச-தனியார் துறை பங்கேற்புகள் மூலம் நிலையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து தொழிற்படும் பிராந்திய அவிபிருத்தியை ஊக்குவிப்பதற்கு, இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பொது புரிதலுடனான இணக்கப்பாட்டுடன் இந்த கலந்துரையால் சந்திப்பு நிறைவுற்றது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த