எதிமலை – கொட்டியாகல பகுதியில் 02 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, பெருமளவான கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (25) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுமார் ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3,754 கஞ்சா செடிகளும், ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3602 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சாச் செய்கைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய எதிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.