ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும், “பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் ஊடகவியலாளர்கள் சொல்ல முடியாத அளவிலான கொடூரங்கள், துன்பங்கள் மற்றும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். அதில் பலர் கொல்லப்பட்டதோடு, காணாமலாக்கப்பட்டும் நீதி இன்றியே மறைந்துபோயுள்ளன.

தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது, சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் எதிராகவும் கொடூரங்கள் இழைக்கப்பட்டன. படுகொலைகள் நடைபெற்றபோதிலும், அவை தொடர்பாக உரிய நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சுயாதீனமானதும் நேர்மையானதும் ஆன புலனாய்வுகள் முன்னெடுக்கப்படாததுடன், குற்றம் இழைத்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் இல்லை. எனவே, இவ்வாறான அனைத்து சம்பவங்களையும் விசாரிக்க தனியான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

அத்தகைய ஆணைக்குழு நியமிக்கப்படுமானால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது. படைத் தரப்பிலும் புலனாய்வு பிரிவுகளிலும் இருந்த சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது மெல்ல மெல்ல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவது அவசியமாகும்.

அதன் மூலம் பல உண்மைகள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், சிறுபான்மையினரின் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்

n

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு பிரதம நீதியரசர் விஜயம்

March 3, 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.