உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏனைய பயிர்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கமென்ற வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் அனைத்து விவசாயிகளையும் பாதுகாப்பதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நுகர்வோருக்கு கொள்வனவு செய்யக் கூடிய விலைக்கு வெங்காயத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் அவசியம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது. துல்லியமான தரவுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெளிவுபடுத்தினார்.

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து இதன் போது பரவலாக ஆராயப்பட்டது. உள்ளூர் பெரிய வெங்காய பயிற்செய்கை தொடர்பான நிலையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விவாசாயத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த பெரிய வெங்காய உற்பத்தியை 2026 ஆம் ஆண்டில் 22% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 27% ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்ட செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் பெரிய வெங்காயத்திற்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, களஞ்சியம் உட்பட விவசாயிகளின் வசதிகளை விரிவுபடுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

அதிக இடைவெளியுடன் கூடிய விலை ஏற்ற இறக்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினை என்றும், அந்த ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலே தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர். மேலும், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறையான பெரிய வெங்காய பயிற்செய்கையில் தொடர்ந்து ஈடுபட தேவையான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சிறிய காணிகளில் பயிரிடுவதால், உற்பத்திச் செலவைக் கணக்கிடுவது போன்ற முடிவுகளை எடுக்கும்போது இந்தக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த இங்கு விளக்கினார். அவசர நிலைமைகளில் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளிடமும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் முதன்முறையாக தலையிட்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.

விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமாராச்சி மற்றும் விவசாயத் திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகள், தம்புள்ளை மற்றும் கலென்பிந்துனுவெவவைச் சேர்ந்த பெரிய வெங்காய விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்