உலகளாவிய ரீதியில் புதிய வரியை விதித்தார் டிரம்ப்!

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை “முட்டாள்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்தத் திட்டத்தை வெளியிட்டார்.

6-3 என்ற விகிதத்திலான தீர்ப்பில், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயல்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இது பில்லியன் கணக்கான டொலர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளதுடன், உலகளாவிய வர்த்தகச் சூழலில் புதிய நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய டிரம்ப், வரித் தொகையைத் திரும்பப் பெறுவது சட்டப் போராட்டமின்றி நடக்காது என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுபறியாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதாக அவர் வாதிடும் இந்த இறக்குமதி வரிகளைத் தொடர, பிற சட்டங்களை நாடுவேன் என்றும் அவர் கூறினார்.

“எங்களிடம் மாற்று வழிகள் உள்ளன – சிறந்த மாற்று வழிகள், இதன் மூலம் நாங்கள் இன்னும் வலிமையடைவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.