இணையத்தின் ஊடாக சர்வதேச தரத்திலான புதிய வெகுஜன ஊடகமான Behind Me Mediaஇலங்கைக் கிளை அலுவலகத்தின் திறப்பு விழா இன்றைய தினம் வவுனியா நகரில் நடைபெற்றது.
Behind Me Media சர்வதேச நிறுவனத்தின் செயற்பாடுகள் ஒரு தளத்தில் பல் விடயங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தனது செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்துள்ளது.
உள்ளூர் தொடக்கம் உலகம் வரையிலான செய்திகள், சம கால நிகழ்வுகள், அரசியல், கலை, கலாசாரம், அறிவியல், தொழில் நுட்பம், விழிப்புணர்வுத் தகவல்கள் மற்றும் பொழுபோக்கு அம்சங்கள்… என சகல வயதினருக்கும் பொருத்தமான விடயங்களை Behind Me Media வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக் கிளை அலுவலகத்தின் ஊடாக தனது செயற்பாடுகளை விஸ்தீரணப்படுத்தி முழுவீச்சுடன் Behind Me Media வெகுஜன ஊடகம் செயற்படத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.