” பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது,” என மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
எரிசக்தி வர்த்தகம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தைகள் சிதைக்கப்படுகின்றன. கொள்கைகள் பாரபட்சமாக அமல்படுத்தப்படுகின்றன. கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டியது இல்லை.
புதிய சூழ்நிலைகளுக்கு உலகம் தவிர்க்க முடியாமல் எதிர்வினையாற்றுகிறது. சமரசம் செய்யப்படுகிறது. தொழில்நுட்பம், போட்டித்தன்மை, சந்தை அளவு, டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றின் யதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. பன்முகத்தன்மை வளரவும் செய்யும். இவை அனைத்தும் தீவிரமான உலகளாவிய கலந்துரையாடலுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நமது தற்காப்பு உரிமையை எப்போதும் சமரசம் செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.