உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது.

மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அவரது தலைமையில், வீடற்றவர்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது அர்ப்பணிப்பான சமூகப் பணியை முன்னிட்டு, வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“ஆண்டின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையும் பொறுப்பும் அளிக்கிறது. இது எனது சேவையை மேலும் சிறப்பாக செய்யும் உந்துதலை அளிக்கிறது” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

“ஒரு நல்ல குடிமகனாக இருப்பது என்பது, சமூகத்தின் நலனுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகும். நமது சிறிய செயல்களே தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன்.

இந்த விருது எனது சேவை, பொறுப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் உறுதியை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மோசஸ் வேதமுத்துவின் இந்த சாதனை, தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை