உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: ஆப்கானையும் வீழ்த்தியது இலங்கை

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் இன்று ஆரம்பமாகும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை, அதற்கு முன்னோடியாக நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

இந்த வெற்றிகளை அடுத்து உற்சாகம் அடைந்துள்ள இலங்கை இளையோர் அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்க இளையோர் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை இளையோர் அணி வெற்றிபெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இறுக்கமான வெற்றிகளையீட்டியதால், உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக பிரயாசை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டி வரும்.

விண்ட்ஹோக்கில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

கவிஜ கமகே 97 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 85 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 170 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

241 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நல்ல நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 5 விக்கெட்களை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

விரான் சமுதித்த 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

267 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு ஆப்கானிஸ்தான் இளையோர் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆட்டம் மழையினால் தடைப்பட்டது.

ஆட்டம் தொடர்ந்தபோது அதன் வெற்றி இலக்கு 23.5 ஓவர்களில் 118 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

ஆப்பானிஸ்தான் 23.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

பந்துவீச்சில் விக்னேஸ்வரன் ஆகாஷ் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மலின்த சில்வா 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரசித் நிம்சார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்