கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவு உடபலாத்த பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. டி.எம்.ஜயரத்ன ஞாபகார்த்த சமய மத்திய நிலையங்கள் மற்றும் உயிரியல் பல்வகைமை மத்திய நிலையம் என்பவற்றின் அறக்கட்டளையால் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவை மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி வரை அத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்புலுவாவைக் குன்று சுற்றுலாத் தளமாகவும் உயிரியல் பல்வகைமை மத்திய நிலையமாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.