உப உற்பத்திப் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

ரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வரும் காலத்தில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மஹாவலி நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டம் கூடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சோளத் தேவையில் 50 சதவீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஏனையவை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான சாகுபடி நிலங்கள் இல்லாத காரணத்தினால், அதற்குப் பதிலாக அரிசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்காக வயல் நிலங்களை விரிவாக்க எதிர்பார்க்கவில்லை என்றும், விவசாயத் திணைக்களத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி விளைச்சலை அதிகரிக்குமாறும் அவர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

“நெல் அறுவடை செய்யப்பட்டவுடன் ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதைத் தவிர்த்து, அதனை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் சேமித்து வைக்கும் நிலைக்கு விவசாயிகளைக் கொண்டு வருவதே எமது இலக்கு. நெல்லை உலர்த்துவதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் ஒரு முறையை நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். அறுவடை செய்தவுடன் விவசாயியின் பணி முடிந்துவிடுவதாகக் கருதக்கூடாது. அதனுடன் நெல்லை உலர்த்துதல் மற்றும் களஞ்சியப்படுத்துதல் ஆகிய இரு பகுதிகளும் இணைய வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

எமக்கு இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன. ஒன்று விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மற்றொன்று உணவுப் பாதுகாப்பு. விவசாயிக்கு நியாயமான இலாபம் கிடைக்காவிட்டால் விவசாயத்தைச் செய்ய முடியாது. நாம் நெல் விலையை வர்த்தமானி மூலம் சட்டமாக்கவில்லை. தனியார் துறையினர் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதைத் தடுப்பதே எமது நோக்கம். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலையீடு போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அங்கு களஞ்சியசாலை மற்றும் பணியாளர் பிரச்சினைகள் உள்ளன.

வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு விவசாயத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என நாம் அஞ்சினோம். ஆனால், நாம் நட்டஈடு வழங்கி மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தோம். அதற்காக விவசாயிகளுக்கும், அவர்களுடன் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போது நாம் கீரி சம்பா அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் கீரி சம்பாவை அதிகளவில் பயிரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

4556

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

March 14, 2026

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” –

fue

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் புதிய செய்தி

March 14, 2026

உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும்

45

கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள்

March 14, 2026

ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக

xa

மொன்ரியல் நகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; வன்கூவரில் ஒரு பெண்ணைக் குத்திக்கொன்றவர்?

March 14, 2026

வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur

chaco

மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

March 14, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை

d

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

March 14, 2026

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக

heat

வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

March 14, 2026

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு,

Sri

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது – சிறீதரன்  எம்.பி

March 14, 2026

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக்

plas

கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பின் நால்வர் உயிரிழப்பு – சுகாதார அமைப்பு தகவல்

March 14, 2026

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில்

Parliament

17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

March 14, 2026

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி

c

அமெரிக்காவின் முடிவால் சீனா கடும் அதிருப்தி

March 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, தாய்வானுக்குப் புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை

Thala

தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

March 14, 2026

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்