முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளம் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உடையார்கட்டு குளம் அருகே விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 லீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.