ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜாஸ்மினுக்கு எதிராக ஏன்? சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான பட்ஜெட் குழு நிலை விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்றும் அவர் கூறினார்.