ஈழத்து விநாயக ஆலயங்களில் முதன்மையான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று!

வரலாற்றுச்சிறப்புமிக்க மானிப்பாய் மருதடி விநாயகருக்கு இன்று தேர்த்திருவிழா.

ஈழத்தில் விநாயகரின் ஆலயங்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்.

தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீக வரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி விநாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக் கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

காலம் தவறாத பூசை வழிபாட்டு ஒழுங்கு திருப்பணி வேலைகள் அறநெறிப்பாடசாலை ஆலய நிர்வாகம் என மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதடி விநாயகர் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் கடந்த 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் புதுவருடப்பிறப்பு தினமான இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை இரதோற்சவமும் நாளை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

மின்னும் மருதடி வாழ் வேழமுகன் றாள் பணிந்து
பன்னுவவன் காதை பகர்ந்திடவே – மன்னுபுகழ்
நீட்டு மலைமேல் றிகழ்பா ரதம்வரைந்த
கோட்டுமுகன் பாதங் குறி

என்று போற்றுகின்ற மருதடி விநாயகரின் அற்புதத்தினை காண பல்லாயிரக்கனக்கான அடியவர்கள் மகோற்சவ காலத்தில் எம்பெருமானின் சந்நிதானத்திற்க்கு அலைஅலையாக திரண்டு வருவார்கள்.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் புதுவருடப் பிறப்பன்று பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் புடைசூழ விநாயகப் பெருமானின் இரதோற்சவத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

மகிமை மிக்க மருதடியான் திருவருளைப் பெறுவதற்காக பல ஊர்மக்களும் நேர்த்திகளை நிறைவேற்ற இத்தலத்தை நோக்கி தினமும் வருவர்.

இவ்வாலயத்தில் மூன்றுகாலப் பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தி திதியில் விநாயகப்பெருமானுக்கு விஷேட பூசைகள் நடைபெறும் ஆவணி சதுர்த்தி தினமானது பெருமானது சந்நிதானத்தை பார்ப்பவர் கண்களை பூரிக்கச் செய்கின்றது.

இச்சதுர்த்தி ‘தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் யாவரும் வந்திவனேவல் செய்திடும்நாள்’ ஆக போற்றப்படுகின்றது. கார்த்திகை மாதத்தில் விநாயக விரதம் ஆரம்பமாகி இருபத்தொரு நாட்களாய் பிள்ளையார் கதை வாசிக்கப்பட்டு கடைசிநாளிலே கஜமுக சங்காரம் நடைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்று.

மருதமரத்துப் பிள்ளையார் வருசத்திலே பங்குனி மாதத்தில் உற்சவம் ஆரம்பமாகி தமிழ்ச் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரதோற்சவமாகக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை பதினெட்டு நாட்கள் உற்சவமும் 2004 உற்சவத்தையடுத்து புனரமைக்கப்பட்டு கருங்கற் கோவிலாக மீண்டும் 2014 ஆம் ஆண்டில் புதுபொலிவு பெற்று 48 நாட்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதனையடுத்து 25 நாட்களாக உற்சவ நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு 25 நாட்கள் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடி எடுத்தல் தீச்சட்டியெடுத்தல் அங்கப்பிரதட்சணம் செய்தல் அடியழித்தல் அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல் பிள்ளை விற்று வாங்கல் மடிப்பிச்சை எடுத்தல் பட்டுச் சார்த்தல் தேவாரம் ஓதுதல் வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

இக்காலத்தில் புராண படனம் செய்தல் சமயப் பிரசங்கம் செய்தல் திருமுறைகள் ஓதுதல் ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.மருத மரத்தடியில் வீற்றிருந்தருளும் விநாயகப்பெருமான் வேண்டும் அடியவர்க்கு வேண்டும் வரங்களினை வழங்கிக் கொண்டிருக்கின்றான்.

பூவாழி மன்னர்மநு நீதி வாழி
புகலரிய மடமகளீர் நிறையும் வாழி
ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி
ஓவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சாரசரங்க ளனைத்தும் வாழி
மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும்
மருதடியிற் கணபதிதாள் வாழிவாழி.

என்று மகோற்சவ காலத்தில் விநாயகப்பெருமானை மெய்யுருகி வழிபாடாற்றி சைவர்களாக சைவ வாழ்வு வாழ்ந்து இம்மை மறுமைப் பயன்களினை நாம் பெற்றுய்வோமாக.

நன்றி: சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் (முகநூல் பதிவு)

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக