ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,002 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் படையெடுத்துள்ளன.

இது குறித்து டிரம்ப் கூறுகையில்,

”ஈரானில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எதற்கும் தயாரான நிலையில் இருக்கவே போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப் படுகின்றன. ”அணுசக்தி திட்டத்தை துவங்கினாலோ அல்லது கைதானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலோ ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,” என, எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈரான் தளபதிகள்,

தங்கள் விரல்கள் துப்பாக்கி விசையின் மீது இருப்பதாகவும், எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு மேற்காசிய நாடான ஈரானில், டாலருக்கு எதிரான அந்நாட்டின் கரன்சி மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக, கடந்த டிசம்பர் முதல் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, இணைய மற்றும் தொலை தொடர்பு சேவையை ஈரான் அரசு முடக்கியது.

எனினும் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், 43 குழந்தைகள் உட்பட 5,002 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட, எச்.ஆர்.ஏ.என்.ஏ., என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட 26,800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது-. இதற்கிடையே, ஈரான் அரசு முதன்முறையாக போராட்டத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 3, 117 பேர் பலியாகியுள்ள தாக தெரிவித்துள்ளது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகள் என்றும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைதான 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தையும் ஈரான் அரசு மறுத்துள்ளது.

அதே சமயம், மரண தண்டனை தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்நாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்