ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளதாக கூறினார்.
அதன்படி, ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் திறன்களை முற்றிலுமாக அழித்தல்,
ஈரானிய கடற்படையை செயலிழக்கச் செய்தல், மேலும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முக்கிய இலக்குகள் என விளக்கினார்.
“இந்த ஆட்சியால் உருவாகும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு இதுவே” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.