ஈரானில் முழுமையாக முடக்கியுள்ள இணையச் சேவை

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கம் இணையச் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ளது.

ஈரானில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, ஸ்டார்லிங்க் நிறுவனம் அங்குள்ள பயனாளர்களுக்கான மாதந்திர சந்தா கட்டணத்தைத் தள்ளுபடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தாத நிலையிலும் தங்களுக்கு இணையம் கிடைப்பதாக ஈரானில் உள்ள பல பயனாளர்கள் பிபிசி பாரசீக சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானில் ஸ்டார்லிங்க் கருவிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இதைப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

போராட்டங்கள் மற்றும் வன்முறை ஒடுக்குமுறை குறித்த வீடியோக்கள் வெளியாகும் பகுதிகளில், கட்டடங்களின் மேற்கூரைகளில் ஸ்டார்லிங்க் ஆண்டெனாக்கள் உள்ளனவா என ஈரான் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், “சதித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த” ஏராளமான ஸ்டார்லிங்க் கருவிகளைப் பறிமுதல் செய்துள்ளதாக ஈரான் உளவுத்துறை அறிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இணைய முடக்கம் காரணமாக இந்தத் தகவல்கள் வெளிவராமல் தடுக்க அரசு முயல்கிறது.

“அரசின் தணிக்கை இன்றி உலகத்தோடு தொடர்பு கொள்ள ஸ்டார்லிங்க் மட்டுமே தற்போது ஒரே வழியாக உள்ளது” எனப் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் தற்போது ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாகக் கணிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், “வெளிநாடுகளில் இருந்து வரும் பயங்கரவாத உத்தரவுகளைத் தடுக்கவே இணையம் முடக்கப்பட்டுள்ளது” என்று நியாயப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் போன்ற செயலிகள் வன்முறையைத் தூண்டப் பயன்படுத்தப்படுவதாக அரசு குற்றம் சாட்டுகிறது.

இருப்பினும், உயிரைப் பணயம் வைத்து போராட்டக் களத்தின் கொடூரமான காட்சிகளை ஈரானியர்கள் ஸ்டார்லிங்க் உதவியுடன் சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.