ஈரானில் பதற்றம்; இந்தியர்களை உடனே வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஜனவரி 5 ஆம் திகதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவசர தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உள்ளூர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.

தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் cons.tehran@mea.gov.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஈரானில் இருக்கும் இந்தியர்களில் யாரேனும் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால், அவர்கள் meaers.com/request/home என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைப்பு இந்திய தூதரக இணையதளத்திலும் உள்ளது.

ஈரானில் இணைய தடைகள் காரணமாக இங்குள்ள இந்தியர்களால் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்காக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய