ஈரானுடன் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியான முடிவுகள் ஈரானின் தீர்மானத்தைப் பொறுத்ததாக இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நீடித்ததுடன், அது முழுமையான வெற்றியடையவில்லை என்றாலும் சில முக்கிய முன்னேற்றங்கள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அணுசக்தி செறிவூட்டலை நிறுத்தியிருந்தால் பேச்சுவார்த்தை சிறப்பாக முடிந்திருக்கும் என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது ஈரானின் நடவடிக்கைகளில் தான் அமையும் என்றும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் அணு ஆயுதம் பெற்றிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதையும், எரிசக்தி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.