ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அங்கு இடைக்கால பொறுப்பை நிபுணர்கள் சபை ஏற்றது.
பின்னர் 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், நேற்று இந்த முடிவை இறுதி செய்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.