ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள், தெஹ்ரான் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதி செய்வதில் முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் விரைவாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றாலும், எப்படியாவது இதை நாம் முடித்துவிடுவோம்.
ஈரான் தடுத்துள்ள அந்த நீர்வழிப்பாதை வழியாக தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்ஜீனியாவின் பீட்மாண்ட் பகுதியில் உள்ள ட்ரம்ப் ஒயின் ஆலைக்கு நிதி திரட்டும் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் பேசிய ஜனாதிபதி, ஈரானுடனான ஒப்பந்தத்தில் அந்நாட்டின் அணுசக்தித் திறன்களைக் குறைப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் வேன்ஸ் குறித்து ட்ரம்ப் கூறுகையில், “அவருக்கு என் வாழ்த்துக்கள். அவர் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.