சூரிய கிரகணம் என்பது, சந்திரன் பூமி மற்றும் சூரியன் இடையே நேர்கோட்டில் வந்து நிற்கும் போது, சூரியனின் ஒளி பூமியை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அடையாமல் மறைக்கப்படுவதைக் குறிக்கும். இந்த நிகழ்வு அமாவாசை நாளில் மட்டுமே நடைபெறும். சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்தால் முழு சூரிய கிரகணம், ஒரு பகுதி மட்டும் மறைந்தால் பகுதி சூரிய கிரகணம், சூரியன் வளையம் போல தெரிந்தால் வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் ஒரு இயற்கையான விண்வெளி நிகழ்வாகும். இதனை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது.
ஒவ்வொரு ஒரு ஆண்டின் தொடக்கத்தில், சூரிய கிரகணம் மற்றும் சந்திரக் கிரகணம் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் பொழுது குறிப்பிட்ட சில மணி நேரங்களில் இந்த சூரிய கிரகணம் ஏற்படும்.
பொதுவாக சூரிய கிரகணம் அனைத்தும், அமாவசை நாட்களில் தான் தோன்றும். காரணம், அமாவாசை நாளில் தான் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும். அப்போது சூரியனிலிருந்து வரும் ஒளியை சந்திரன் மறைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ மறைந்தது போலத் தெரிகிறது. இதுவே சூரிய கிரகணம்.
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி மாதம் 17, 2026 அன்று செவ்வாய்க்கிழமை நிகழயுள்ளது. இது மாசி அமாவாசை தினத்தன்று வருகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி, மாலை நேரத்தில் தொடங்குகிறது. அதாவது, பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 3:26 pm அளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மேலும், பிப்ரவரி 17 அன்று 7:57 மாலை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முடிவடைகிறது.