இழப்புக்களுக்கும் மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் தொடர் உதவிகளே இலங்கைக்கு அவசியம் – ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டு

தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தித்வா’ சூறாவளியின் விளைவாகக் கடந்த வெள்ளிக்கிழமை மிகமோசமான மண்சரிவு மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு என்பன பதிவான நிலையில், நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்காக அண்மைய அனர்த்தம் கருதப்படுகிறது.

இவ்வனர்த்தத்தினால் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், காணாமல்போயும் இருப்பதுடன் இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் மிகநெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஊடாக உள்நாட்டு மனிதாபிமான உதவிக்குழு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதுடன் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் கிளை அலுவலகத்தின் அனுசரணையுடன் கூட்டு உதவித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு உணவு, தூய குடிநீர், சுகாதார மற்றும் தங்குமிட வசதிகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு அவசியமான பொருட்கள் உள்ளிட்ட உடனடி அத்தியாவசியத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏதுவான வகையில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் துரிதமாக இயங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி ஐ.நா அலுவலகம் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து உதவிகள் தேவைப்படுவோரை அடையாளங்காண்பதற்கான கூட்டு மதிப்பாய்வையும் முன்னெடுத்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே, ‘தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும். எனவே பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீட்சியை நோக்கிப் பயணிப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உதவமுடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான