இலங்கை விமானப்படையின் 27ஆவது சைக்கிள் சவாரியின் முதலாவது சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இலங்கை விமானப்படையின் 75 வது வருட நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப்படை சைக்கிள் சவாரி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு 27 ஆவது விமானப்படை சைக்கிள் சவாரி நீர்கோழும்பில் நேற்று 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமானது.
நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணித்தியாலம் மற்றும் 47 நிமிடத்தில் நிறைவு செய்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த முஹம்மத் அவர்கள் முதலாம் இடத்தினை பெற்றார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை இலங்கை விமானப்படையைச் சேர்ந்த வீரர்களான சமோத் டீ சில்வா மற்றும் நிதுஸ் நிரந்த ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நாளைய தினம் இரண்டாவது சுற்றுத் தொடர் புத்தளம் இருந்து அனுராதபுரம் ஊடக தம்புள்ள வரை சுமார் ( 143 கிலோ மீட்டர் ) வரை இடம் பெற உள்ளது.