இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த பக்தர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றோம்.

திருவிழா முடிந்து திரும்பும் போதும் இதே நிலை நீடித்தது. அங்கிருந்த இளம் கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்டார். வெயில் மற்றும் நெரிசல் காரணமாக பக்தர்கள் பலர் மயக்கமுற்றனர். இதனால், மக்களைக் கடற்கரையில் சற்று நேரம் அமர அனுமதிக்குமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது ஏற்பட்ட முரண்பாட்டில், கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களைத் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திரண்டு நின்று, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து நிலைமையைச் சீர்செய்து, மக்களை அமர அனுமதித்தார்.

பக்தர்கள் உள்ளே நுழைய நான்கு வழிகள் மட்டுமே காணப்படுகின்றன. பெருமளவான பக்தர்கள் வரும் போது அதனைச் சமாளிக்க போதுமான வசதிகள் இல்லை. அதேபோல, திருவிழா முடிந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லும்வரை, பொதுமக்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தெய்வாதீனமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.

இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்குத் தனித்தனியான பாதைகளை அமைத்துக் கொடுத்தால் நெரிசலைத் தவிர்க்கலாம். அதேபோல, மக்களை நீண்ட நேரம் தடுத்து வைக்கும் முறையை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்திய அரசும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சும், யாழ்ப்பாணம் ஏற்பாட்டுக்குழுவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய