இலங்கையணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக ஆலோசனை அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் தயார்படுத்தலை பிரதான நோக்காகக் கொண்டே ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (08) தெரிவித்துள்ளது.
இலங்கைக் குழாமுடன் ஜனவரி 18ஆம் திகதி ரத்தோர் இணையவுள்ளதுடன், மார்ச் 10ஆம் திகதி வரையில் அணியுடன் இருக்கவுள்ளார்.