வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள் மற்றும் விவசாயத் துறைக்கான பிற உள்ளீடுகள் இலங்கையில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் டி.ஜி.வி. ஷியாமலி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது குறித்த ஊடக சந்திப்பு, கன்னோருவவில் உள்ள தேசிய விவசாய மற்றும் தகவல் மையத்தில், விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் துஷாரா விக்ரமாராச்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திவே அவர் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும் போகம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்த சிறு போகத்திற்கு ஈதவையான அடிப்படை வசதிகள் நாட்டில் இருப்பதன் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் எமது விவசாய உற்பத்தியை பாதிக்காது.
பெரும் போக பருவத்திற்கான அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டது, வரவிருக்கும் சிறு போக பருவத்திற்கான உற்பத்திப் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பமாகி விட்டது. மேலும், விவசாயிகள் தங்கள் உற்பத்தியை தொடர்வதற்குத் தேவையான விவசாய உதவிகளை வழங்குவதற்காக ஒரு அடிமட்டத் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மலையகப் பகுதி காய்கறி உற்பத்திகளுக்குத் தேவையான வித்துக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, ஆனால் கரைநாட்டு சமவெளிப்பகுதி காய்கறிகளுக்கான வித்துக்கள் விவசாயிகளால் சுயமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
நாட்டிற்குத் தேவையான விதைகளில் கணிசமான அளவை விவசாயத்துறையினர் வழங்குகின்றனர். தரமான விதைகள், விதைச் சான்றளிப்புச் சேவை மூலம் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.