இலங்கையில் ஏழ்மையடைந்தோர் தொடர்பில் ஆண்ட – ஆண்டு கொண்டிருக்கின்ற எந்த அரசிடமும் சரியான தரவுகள் கிடையாது – சஜித் பிரேமதாச

இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வேறு பல நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்புகள் நாட்டில் தற்போது வறுமை நிலையானது 40-50% க்கு இடையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை யாதென்பதை தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது முந்தைய அரசாங்கத்திற்கோ சரியாகத் தெரியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூட இன்னும் இதை துல்லியமாகக் கணக்கிடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் காலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு, அம்லங்கொடை தேர்தல் தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வீட்டு அலகின் வருமான மற்றும் செலவின கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த வேளையே, இதை செய்திருக்க வேண்டும். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமானது, ஒரு வீட்டின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளைக் கணக்கிட்டு வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்து, வறுமைக் கோட்டில் இருப்பவர்கள் மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்களை ஏழ்மையடைந்தோர் என அடையாளப்படுத்துகிறது. இதைக் கணக்கெடுக்காது, அஸ்வெசும வழங்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திசைகாட்டி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே வறுமையை ஒழிக்கப்பதாக கூறிக் கொண்டு பிரஜா சக்தி வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற வறுமையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அஸ்வெசும வழங்கப்பட்டது. தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றன. பலர் அஸ்வெசும கோரி விண்ணப்பித்த போதிலும், அவர்களில் உண்மையான வறியோரைக் கண்டறிய எந்த விஞ்ஞானபூர்வ அளவுகோல்களும் இல்லை. இது இவ்வாறு இருக்கத்தக்க, இப்போது பிரஜா சக்தி என்ற புதிய பெயரில், திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜா சக்தி வேலைத்திட்டத்தில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கும் இந்தத் தலைவர்களின் பரிந்துரை தேவையாம்.

தமது கட்சிக் கட்டமைப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்திக் கொள்வதற்கே பிரஜா சக்தி வேலைத்திட்டம் ஊடாக இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலி பிம்பங்களால் இன்று மக்களே இறுதியில் ஏமாந்தும் உதவியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். மறுபுறம் உழைக்கும் வர்க்கத்தை காக்க வந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

By C.G.Prashanthan

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்