இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு மிகமோசமான மனிதப்பேரவலம் – தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை நிகழ்த்தியதன் பின்னர் புலிக்கொடியை ஏற்றிவைத்தார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள் நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது. தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில் பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும்.

ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும் குறியீடாகும்.

அதேபோன்று உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியே போதியளவு பேசப்படவேண்டும். இந்த இனவழிப்புக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அதிலிருந்து தப்பிவிடலாம் எனக் கருதினால், அவ்வாறு தப்பிக்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் கூறுகின்ற பதிலாகும்.

எமது நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்கத்தின் (இலங்கை) அடிவருடிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை .

என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம். அதேவேளை தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம், தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழீழத் தேசியக்கொடிக்கான அங்கீகாரம் என்பன உள்ளடங்கலாக இவ்விடயத்தில் எட்டப்பட்டிருக்கும் கணிசமாளனவு முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் விவகாரம் பலரது அவதானத்தைப் பெறும். அத்தோடு வலிமையுடனும், மீண்டெழும் தன்மையுடனும் தொடர்ந்து குரல் எழுப்பும் பிரம்டன் மற்றும் கனேடிய தமிழ் மக்கள் குறித்துப் பெருமையடைவதுடன் நாம் தமிழீழ மக்களுடன் என்றும் உடன்நிற்போம் என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்