இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களை ஆழமாக ஆராயும் “ FOOTPRINT ” எனும் ஆவணப்படம், நாட்டின் நிலைமையை நான்கு முக்கிய அத்தியாயங்களை ஆராயும் ஒரு துடிப்பான படமான உருவாக்கப்படுள்ளது.
இந்த ஆவணப்படம் கொழும்பில் நகரமயமாக்கல், நீர் பாதுகாப்பு, விலங்கு விவசாயம் மற்றும் மனித – யானை மோதல் ஆகிய பிரச்சினைகளில் மூழ்கி, மனித செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சிக்கலான உறவை ஆராயும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம், மனிதச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிறது. கொழும்பின் வேகமான வளர்ச்சி இயற்கை வளங்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தம், நீர் மாசடைதல் மற்றும் தட்டுப்பாடு, விலங்கு வேளாண்மையின் சுற்றுச்சூழல் விளைவுகள், மேலும் வளர்ச்சியால் விலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்து மனிதர்–யானை மோதல்கள் அதிகரிப்பது போன்ற விடயங்கள் இதில் பிரதிபலிக்கப்படுகின்றன.
இந்த ஆவணப்படம், இலங்கையைச் சேர்ந்த எட்டு திறமையான இயக்குநர்களான ஷனக போடியபாதுகே, அசங்க ஜெயவர்தன, யோஷித பெரேரா, சமீர வீரசேகர, மலிந்த ஹிடெல்லாராச்சி, கிருஷான் ராஜரத்ன, உதார அபேசுந்தர மற்றும் சானக விஜமுனிகே ஆகியோரின் கூட்டுப் படைப்பாகும்.
ஃபுட்பிரிண்ட், தி மூவ்மென்ட் லேப் நிறுவனத்தால், கிரீன் பிக்சர்ஸ், எம்பதி பிலிம்ஸ், வெஜ்வோயேஜஸ் ஃபவுண்டேஷன் மற்றும் த்ரைவ் ஆகியவற்றுடன் இணைந்து, படைப்பாற்றல் தயாரிப்பாளர் சுமுது மலலகமா, இணை தயாரிப்பாளர்கள் சோஃப்னா யூசி மற்றும் ஷோவா புஜெல் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் சாக் லோவாஸ் மற்றும் டாக்டர் ஹர்ஷா ஆத்மகுரி ஆகியோருடன் இணைந்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“ FOOTPRINT ” ஒரு ஆவணப்படமாக ம்ட்டுமல்லாமல் மனிதர்கள் தமது வாழ்வியலையும், அவர்கள் விட்டுச் செல்லும் தடங்களையும் சிந்திக்க தூண்டுகிறது — மேலும் நிலைத்த மற்றும் சிந்தனையுள்ள வாழ்க்கை முறைக்கான மாற்றத்தை ஊக்குவிக்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ளது.