- Yasmin Sooka and Frances Harrison
ஹெய்ட்டியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின பணிக்காலம் செப்டம்பர் 30-டன் முடிவடையும் நிலையில் அதனை புதுப்பிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விரைவில் தீர்மானிக்கவுள்ளது. பாதுகாப்புச் சபையில் இதற்கான வரைவு தீர்மானத்தை முன்னெடுக்கும் முக்கிய நாடுகளாக அமெரிக்காவும் பானாமாவும் உள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின படையணிக்காக இலங்கை அளித்துள்ள பங்களிப்பு இந்த இராணுவ நடவடிக்கையிலேயே மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும். இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி 900 இராணுவ வீரர்களும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 189 துணை இராணுவபிரிவினரும் இதில் அடங்குவர். 2025-இல் நடைபெற்ற படைத் திரட்டல் மாநாட்டில் 5550 என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு எதிராக 7500-க்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டது. உறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையானது உடனடியாக பயன்படுத்தக்கூடிய கொள்ளளவுக்குச் சமமானதல்ல என்றபோதிலும் ஹெய்ட்டியில் இலங்கைக்கு மோசமான பின்னணி வரலாறு இருந்தபோதிலும் இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2007-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் இரகசிய விசாரணையில் 2005 முதல் 2007 வரையிலான காலத்தில் ஹெய்ட்டியில் அடுத்தடுத்து பணியமர்த்தப்பட்ட இலங்கை படைப்பிரிவைச் சேர்ந்த குறைந்தது 134 வீரர்கள் 8 வயது வரையிலான சிறுமிகள் உட்பட ஹெய்ட்டி குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி துஷ்பிரயோகம் செய்ததாக நம்பகமான குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டன. 2007-இல் 108-க்கும் மேற்பட்ட இலங்கை வீரர்களை ஐ.நா. திருப்பி அனுப்பியது. எனினும் அவர்கள் எவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டதற்கான எந்தச் சான்றும் இல்லை.
ஐ.நா. மற்றும் இலங்கை விசாரணை அதிகாரிகளின் கூட்டு விசாரணையில் இது திட்டமிடப்பட்ட ஒரு முறையான குற்றச் செயல்பாடு என்பது கண்டறியப்பட்டது: படைகள் நிலைநிறுத்தப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் உணவுக்காகவோ அல்லது சில டாலர்களுக்காகவோ குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகள் ஒரு படைப்பிரிவிலிருந்து அடுத்த படைப்பிரிவுக்குப் பரிமாறப்பட்டன. இதில் ஒரு சிறுவன் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டான். “அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர்” என்று அந்த அறிக்கை முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை எடுத்த நட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கையை 23-லிருந்து 9 ஆகக் குறைத்து பின்னர் 3 ஆகக் குறைத்தது. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழு) வழக்கு விசாரணைகள் குறித்த விவரங்களை மீண்டும் மீண்டும் கோரியபோதிலும் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அந்தப் படைப்பிரிவுகளின் தளபதிகள் அனைவரும் பின்னர் பதவி உயர்வு பெற்றதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கண்டறிந்துள்ளது.
இலங்கை வீரர்கள் 2026 ஜூலையில் போர்ட்-ஓ-பிரின்ஸை அடைந்தனர். ஆகஸ்ட் மாதத்தி தலைநகருக்கு வெளியே அமைந்துள்ள ஆர்டிபோனைட் பிராந்தியத்திற்குப் படைகள் விரிவுபடுத்தப்பட்டதால் ஒரு படைப்பிரிவு கோனைவ்ஸ் பகுதிக்குச் சென்றடைந்தது.
ஐ.நா.வின் பொறுப்பு
GSF- Gang Suppression Forceஎன்பது ஐ.நா.வின் வழக்கமான அமைதிப்படை (‘ப்ளூ ஹெல்மட்’) பணி அல்ல: வீரர்கள் தங்கள் தேசியக் கொடிகளின் கீழும் ஐ.நா. அல்லாத கட்டளையின் கீழும் பணியாற்றுகின்றனர். பாதுகாப்புச் சபை தீர்மானம் 2793 ஹெய்ட்டிக்கான ஐ.நா. ஆதரவு அலுவலகத்தை நிறுவியது. இது படைக்கு தளவாடங்கள் மருத்துவப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை வழங்குகிறது. இந்த ஆதரவானது ஐ.நா.வின் ‘மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கொள்கைசெயல்படத் தூண்டுகிறது.
ஐ.நா.வின் பொதுவான சரிபார்ப்புக் கொள்கையின் கீழ் பங்களிக்கும் நாடுகள் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்குச் சான்றளிக்கின்றன; மேலும் ஒவ்வொரு படைவீரரும் தான் எந்த மீறலிலும் ஈடுபடவில்லை என்று சுய சான்றளிக்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை 2015-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது “முறையான குற்றங்கள்”) நடந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தச் சான்றளிப்பு முறை போதுமானதாக இல்லை என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
2016 முதல் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பட்ட ஒரு சிறப்புச் சரிபார்ப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இது ழுர்ஊர்சு உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆனால் இந்த முறைமை விரைவில் புறக்கணிக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் அனுமதி பெறாத 49 வீரர்கள் தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைதிப்படைக்கு அனுப்பப்பட்டனர். ஓராண்டு காலம் படைகள் அனுப்புவது நிறுத்தப்பட்ட பின்னர் இந்த முறைமை பலப்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 2024-இல்இ இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமைதிப்படை வீரர்களைப் பரிசோதிக்கும் பணியிலிருந்து விலகியது. அதன் அனுபவப் பகிர்வு அறிக்கையில் அமைதிப்படை வீரர்களின் சரிபார்ப்பை “விரைவுபடுத்துவதற்கு நியாயமற்ற அழுத்தம்” கொடுக்கப்பட்டதாகவும் ” நிராகரித்த முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் அளிக்கப்பட்டதாகவும்” பதிவு செய்துள்ளது. து.
நம்பகமான மாற்று முறைமை இல்லை
இரண்டு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அமைதிப்படை வீரர்களுக்கான உள்நாட்டுத் தகுதிச் சரிபார்ப்பு முறைமைக்கு மாற்றாக நம்பகமான எதுவும் உருவாக்கப்படவில்லை. ஐ.நா. முன்மொழிந்துள்ள திட்டத்தின்படி இலங்கை காவல்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்று ஓர் அமைச்சுக்களிடைக்குழுவை அமைப்பதாகும். இது மீண்டும் அரசே தனது சொந்த வீரர்களைச் சரிபார்க்க அனுமதிப்பதாக அமையும். இந்த புதிய சரிபார்ப்பு அமைப்பில் யார் இடம் பெறுவார்கள் அவர்களின் எதிரான கண்டுபிடிப்புகள் யாரையாவது கட்டுப்படுத்துமா நேரடி குற்றவாளிகளுடன் சேர்ந்து தளபதிகளும் மதிப்பிடப்படுவார்களா அல்லது விசாரணைக்கு உள்ளாகும் நிறுவனங்களின் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்ட இரகசிய-OHCHR ஆதாரங்களை இந்த அமைப்பு எவ்வாறு சட்டப்பூர்வமாகப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
.2025-ஆம் ஆண்டில் ஹெய்ட்டியில் கென்யா தலைமையிலான முந்தைய அமைதிப்படை நடவடிக்கையில் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு வழக்குகள் உறுதி செய்யப்பட்டதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது. இலங்கை வீரர்கள் இப்போது ஆர்டிபோனைட் பிராந்தியத்தில் உள்ள அதே முன்னணி தளங்களில் உள்ளனர். ஹெய்ட்டியின் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களில் பாதி பேர் வரை குழந்தைகள் என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. முன்னதாக ஹெய்ட்டி குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டி துஷ்பிரயோகம் செய்த ஒரு படையின் தொடர்ச்சியாக வந்த வீரர்கள் இப்போது பெருமளவில் குழந்தைகளைக் கொண்ட ஒரு எதிரிப் படையை எதிர்த்துப் போராட அனுப்பப்படுகிறார்கள்.