இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் (25.11.2025) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,
“இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைபுகுணர் வருவதற்கு வழங்கப்பட்ட அவகாச காலத்துக்கு பிறகு பரமாணந்தம் என்ற ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளார்.
இது ஒரு காலாவதியான விண்ணப்பம் என எமது தரப்பினால் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கே நீதிமன்றத்துக்கு வந்துள்ளோம்.
குறித்த வழக்கை காலம் கடத்த எதிராளிகளால் காலம் கடந்து இடைப்புகுணர் என்ற ஒருவர் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், மாவட்ட நீதிபதி விடுமுறையில் இருப்பதால், வழக்கானது எதிர்வரும் ஆண்டு மார்ச் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.