இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகளில் வெளிப்படைத்தன்மை?

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத் தன்மையுடனேயே கையாளப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே மீட்புப் பணிக்குரிய உதவியை இந்தியா வழங்கியது.

பாகிஸ்தான், சீனா, நேபாளம் உட்பட அனைத்து நாடுகளும் உதவி வருகின்றன. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் தமது பிரத்தியே நிதியைக்கூட வழங்கியுள்ளனர். தம்மால் முடிந்த வகையில் எமக்கு உதவி வழங்கிய சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

நெருக்கடினான நேரத்தில் நேசக்கரம் நீட்டிவரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நிவாரணப் பணியில் ஓரிரு குறைபாடுகள் இருக்கலாம். அதனை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கட்டமைப்பு மீது விமர்சனங்களை முன்வைப்பத ஏற்புடையது அல்ல.

விநியோகப் பொறிமுறை நீதியாக நடக்கின்றது. வெளிப்படையான அரசாங்க நிர்வாகப் பொறிமுறை உள்ளது” என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறினார்.

அதேவேளை, டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து