இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்ட உதவிகள்

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் ‘டித்வா’ புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர்.

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு