காலியில் இருவேறு இடங்களில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பியதிகம புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே இந்த கார் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெள்ள நிவாரண உதவிகளைக் கொண்டு சென்ற காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, ஹிக்கடுவ – நாரிகம பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றைக் கடக்க முற்பட்ட நிலையில், கார் ஒன்று, புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட அதில் பயணம் செய்த நால்வர் காயங்களுடன் உயிர் தப்பினர்.