இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நேற்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே, பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம், அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ். மாநகர மேஜர் மணிவண்ணன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடனர்.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம