சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கம் ஏற்படும் தருணங்களில் திறந்தவெளிகளில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்றல் , மின்சார உபகரணங்களைப் பயன்படுத்தல் என்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.