இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 90 பேருக்கு ‘கலைமாமணி’ விருதுகள்!

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில் கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகளை 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமின்​றி,உலகம் முழு​வதும் சென்று தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும் என்று அவர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில், 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகள் வழங்​கும் விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய விருது பெறும் கலை வித்​தகர்​களுக்​கான பார​தி​யார் விருதை (இயல்) ந.முரு​கேச பாண்​டியனுக்​கும், எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி விருதை (இசை) கே.ஜே.யேசு​தாஸுக்​கும், பாலசரஸ்​வதி விருதை (நாட்​டி​யம்) முத்​துகண்​ணம்​மாளுக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். யேசு​தாஸ் சார்​பில் அவரது மகன் விஜய் யேசு​தாஸ், விருதை பெற்​றுக் கொண்​டார்.

சிறந்த கலை நிறு​வனத்​துக்​கான கேட​யம் சென்​னை​யில் உள்ள தமிழ் இசைச் சங்​கத்​துக்​கும் (ராஜா அண்​ணா​மலை மன்​றம்), சிறந்த நாடகக் குழு​வுக்​கான சுழற்​கேட​யம் மதுரை மாவட்​டம் பாலமேட்​டில் உள்ள கலை​மாமணி எம்​.ஆர்​.​முத்​து​சாமி நினைவு நாடக மன்​றத்​துக்​கும் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்​து, 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான கலை​மாமணி விருதுகளை ஆண்​டுக்கு தலா 30 பேர் வீதம், மொத்​தம் 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் வழங்​கி​னார்.

அந்த வகை​யில், நாடக நடிகர் என்ற அடிப்​படை​யில் பூச்சி எஸ்​.​முரு​கன், திரைப்பட நடிகர்​கள் எஸ்​.ஜே.சூர்​யா,விக்​ரம்​பிரபு, கே.மணி​கண்​டன், நடிகைகள் சாய் பல்​ல​வி, ஜெயா வி.சி.கு​க​நாதன், இயக்​குநர் லிங்​கு​சாமி, இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​திரன், பாடலாசிரியர் விவேகா உட்பட பல்​வேறு கலைப் பிரிவு​களை சேர்ந்​தவர்​கள் பெற்​றனர். பாடகி ஸ்வேதா மோகன் சார்​பில் அவரது தாய் சுஜா​தா, விருதை பெற்​றுக் கொண்​டார். கலை​மாமணி விருது பெறும் கலைஞர்​களுக்கு 3 பவுன் தங்​கப் பதக்​கம் மற்​றும் விருது பட்​ட​யம் வழங்​கப்​பட்​டது.

விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இது கலைஞர்​களைப் போற்​றும் அரசாக உள்​ளது. சிம்​பொனி சிகரம் தொட்ட இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு திமுக அரசு எடுத்த பாராட்டு விழாவே அதற்கு சான்​று. இசை​ஞானி மேல் இருப்​பது கலைப் பாசம், தமிழ்ப் பாசம், தமிழர் பாசம். அதே பாசத்​தின் அடிப்​படை​யில் விருதுகளை வழங்​கு​கிறோம். இயல், இசை, நாடகம் என முத்​தமிழை​யும் வளர்த்​தது திரா​விட இயக்​கம்.

தமிழர் என்ற தகு​தி, சுயமரி​யாதையை இழந்து வாழ்​வ​தில் எந்த பயனும் இல்​லை. அதனால், கலைகள், மொழி, இனம், அடை​யாளத்தை காப்​போம். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமல்ல, உலகம் முழு​வதும் சென்று கலைகளை வளர்க்க வேண்​டும். தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும். அதற்​கான அனைத்து முயற்​சிகள், உதவி​களை இயல் இசை நாடக மன்​றம் செய்ய வேண்​டும். இதற்கு அரசு உறு​துணை​யாக இருக்​கும்.இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு, இயல்​ இசை நாடக மன்​றத்​ தலை​வர்​ வாகை சந்​திரசேகர்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

hindutamil

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்