தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழந்தார்.
30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்த ரோஷன் குமாரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் தனது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அடித்துச் செல்லப்பட்ட பாத்திரங்கள், பானைகள் மற்றும் பிற பொருட்களை சேகரிக்க காட்டிற்குச் சென்றபோதே எருமை மாட்டின் தாக்குதலுக்கு உள்ளானார்.