இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை எனும் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் 1969-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு நிறுவன அலகாக இலங்கை மின்சார சபை சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி, மின் கடத்துகை, விநியோகம் மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகிய பணிகள் இனிவரும் காலங்களில் 6 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.