பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கொடுப்பனவு விநியோகம் இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி வரை மகப்பேறு வைத்தியசாலைகளில் பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.