இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது – றிஷாட் பதியுதீன்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வு பற்றிய சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இலங்கை சுதந்திரமடையும் போது தனிநபர் வருமானம் 48 டொலர், ஆனால் அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர், ஆகவே ஜப்பானை விட ஒரு டொலர் வித்தியாசத்தில் தான் அன்று இருந்தோம், இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம், நமது நாடு இனவாதத்தினால் தான் குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.

ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.

அத்துடன் முஸ்லிம், தமிழ், சிங்கள மற்றும் கத்தோலிக்க என ஒவ்வொரு மார்க்கத்திற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ’இலங்கையர் தினம்’ நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அரசினால் முறைப்படுத்தப்படவுள்ள “இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், ஹிஸ்புல்லாஹ், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ரவீகரன், மஸ்தான், திகாம்பரம், வைத்தியர் அர்ச்சுனா, மஸ்தான் மற்றும் சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.