இனப்பிரச்சினைக்குதீர்வு காண பிரிட்டன் அழுத்தம்கொடுக்க வேண்டும்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின்மீது பிரிட்டன் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா, சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா, சட்டத்தரணி ஷபானா குல்-பேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் உயர்ஸ்தானிகர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார்.

அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலம் பூர்த்தியடையவுள்ள நிலையில், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்திருத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன உள்ளடங்கலாக தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று இலங்கையை காலனித்துவ ஆட்சியின்கீழ் வைத்திருந்த நாடு என்ற ரீதியிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகித்த அமெரிக்கா அதிலிருந்து விலகியதன் பின்னர் அதற்குத் தலைமை தாங்கும் நாடு என்ற ரீதியிலும் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு பிரிட்டனுக்கு இருப்பதாகவும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.

அத்தோடு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாகத் தெரிவித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரிட்டன் அழுத்தம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த