இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு பேட்டரி தீப்பிடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நாட்டின் பாதுகாப்புப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.