இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும். அவர்களை கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடும் என வடக்கு கடற்படை கட்டளை  தளபதி  ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது. கடற்படை படகுகளுக்கான எரிபொருள் அதிகளவில் தேவைப்படும். அதனால் எரிபொருள் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்

கடற்படையினர் ஒரு டோரா படகில் போனால் , இந்திய மீனவர்கள் 50 – 100 படகுகளில் பெருமெடுப்பில் வருவார்கள். கடற்படையின் படகினை கண்டதும் இந்திய எல்லைக்குள் ஓடி விடுவாங்க. எங்களால் துரத்தி பிடிக்க முடிந்தளவு படகையும் மீனவர்களையும் கைது செய்கிறோம்.

எங்களால் மீனவர்களை கைது செய்ய மட்டும் தான் முடியும். கைது செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்போம். அதனை மட்டுமே கடற்படையால் செய்ய முடியும்.

இந்திய மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் எமக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் போன்றே , உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத செயல்களை தனியே கடற்படை மாத்திரம் தடுக்க முடியாது. அதற்கு மக்களின் சமூகத்தின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.

 சமூகத்தில் இருந்து தகவல்கள் கிடைக்க வேண்டும். அவ்வாறு தகவல்கள் கிடைத்தால் கடற்படையினர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோன்றே இலங்கைக்குள் போதைப்பொருள் வருவதனை கடற்படையினரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு முப்படைகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.

கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ,முடிந்தளவுக்கு கடல் வழியாக போதைப்பொருள் இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடுக்க முடிகிறது.  முழுமையாக கட்டுப்படுத்த விமான படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் கடற்படைக்கு தேவை.

இலங்கை கடற்படை தன்னிச்சையாக  எந்த ஒரு முடிவையும் முடிவெடுக்க  முடியாது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கை எடுக்க முடியும். பாதுகாப்பு  அமைச்சு என்பதே அரசாங்கம்.

ஆகவே எமக்கான ஒத்துழைப்புக்கள் சமூக மட்டத்தில் இருந்தும் , இராணுவம் , விமானப்படை மற்றும் பொலிஸார் என சகல வழிகளிலும் கிடைக்குமாயின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித